Homeசெய்திகள்சினிமாஐஃபா விருதினை வென்றார் சாம் சி.எஸ்

ஐஃபா விருதினை வென்றார் சாம் சி.எஸ்

-

ஐஃபா விருதினை வென்றார் சாம் சி.எஸ்

சர்வதேச ஐஃபா விருதினை வென்றார் இசையமைப்பாளர் சாம் சி. எஸ்

2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இந்தி திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஐஃபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளியிட்டிருக்கிறது. அதில் சிறந்த பின்னணியிசைக்கான பிரிவில் இந்தியில் வெளியான ‘விக்ரம் வேதா‘ எனும் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

மே மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள யெஸ் தீவில் நடைபெறும் கோலாகலமான விருது வழங்கும் விழாவில் சாம் சி. எஸ்ஸிற்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான ஐஃபா விருது வழங்கப்படுகிறது.

இதனிடையே 2017 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான ‘விக்ரம் வேதா’ திரைப்படத்திற்காக சாம் சி எஸ்ஸிற்கு ப்ரவோக் விருது, ஹலோ எஃப் எம் விருது, விகடன் விருது, விஜய் அவார்ட்ஸ் ஆகிய விருதுகளை வென்றிருக்கிறார் என்பதும், இந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் இவருக்கு சிறந்த பின்னணியிசையமைப்பாளருக்கான ஐஃபா விருதை வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ