Homeசெய்திகள்சினிமாஇந்த உலகையே மாற்றிவிடலாம் - சமந்தா

இந்த உலகையே மாற்றிவிடலாம் – சமந்தா

-

- Advertisement -

ஒரு புத்தகம், ஒரே பேனா, ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர் இருந்தால் இந்த உலகையே மாற்றிவிடலாம் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. கோலிவுட்டில் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா. மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் நடிகையாக உருவெடுத்தார். இதைத் தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். விஜய் தொடங்கி டாப் நட்சத்திரங்கள் அனைவருடனும் அவர் இணைந்து பல படங்களில் நடித்து இருக்கிறார்.

தற்போது சமந்தா இந்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். பேமிலி மேன் படத்தில் சமந்தா நடித்திருந்தார். இதையடுத்து தெலுங்கில் சாகுந்தலம் என்ற படத்தில் நடித்தார். இத்திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து, சிவா நிர்வாணா இயக்கத்தில் குஷி படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நாயகனாக நடித்திருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சமந்தா சென்றிருந்தார். அங்குள்ள குழந்தைகளுடன் பேசி விளையாடி மகிழ்ந்தார். அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த அவர், குழந்தைகளுடன் பொழுதை கழிக்கும்போது நல்ல விஷயங்கள் புலப்படுவதாகவும், ஒரு புத்தகம், ஒரே பேனா, ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர் இருந்தால் இந்த உலகையே மாற்றிவிடலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

MUST READ