spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவினோதய சித்தம் படத்திற்கு பிறகு சமுத்திரகனி, தம்பி ராமையா கூட்டணியின் புதிய படம்!

வினோதய சித்தம் படத்திற்கு பிறகு சமுத்திரகனி, தம்பி ராமையா கூட்டணியின் புதிய படம்!

-

- Advertisement -

சமுத்திரக்கனி, பவன் கல்யாண் நடிப்பில் வினோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ப்ரோ’ படத்தை இயக்கி வருகிறார். இவர் படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விமானம் திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். இப்படம் கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியானது. அதேசமயம் லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள ‘ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது.
ஏற்கனவே சமுத்திரகனியும் தம்பி ராமையாவும் சாட்டை, அப்பா உள்ளிட்ட திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தனர். குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான வினோதய சித்தம் திரைப்படத்தில் இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

we-r-hiring

தற்போது மீண்டும் இந்த கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளது.

இந்த படத்தை தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்குகிறார். தம்பி ராமையாவே இந்த படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதி இசை அமைக்கிறார். வி ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் சுரேஷ் காமாட்சி இப்படத்தை தயாரிக்கிறார். ‘ராஜகிளி’ என்று தலைப்பிடப்பட்ட இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

MUST READ