Homeசெய்திகள்சினிமாசமுத்திரக்கனி, தம்பி ராமையா கூட்டணியின் 'ராஜா கிளி'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

சமுத்திரக்கனி, தம்பி ராமையா கூட்டணியின் ‘ராஜா கிளி’….. ரிலீஸ் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -
kadalkanni

நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி ஏற்கனவே நாடோடிகள், அப்பா, ப்ரோ (தெலுங்கு) போன்ற படங்களை இயக்கியுள்ளார்.சமுத்திரக்கனி, தம்பி ராமையா கூட்டணியின் 'ராஜா கிளி'..... ரிலீஸ் குறித்த அறிவிப்பு! அதே சமயம் இவர் கடைசியாக விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்திலும் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் சமுத்திரக்கனி அடுத்ததாக தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் ராஜா கிளி எனும் படத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே சமுத்திரகனி தம்பி ராமையா, ஆகியோர் இணைந்து சாட்டை, அப்பா, வினோதய சித்தம் போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் ராஜா கிளி திரைப்படத்திலும் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தம்பி ராமையா படத்திற்கு கதை, வசனம் எழுத இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் படத்திற்கு கேதர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த ஓராண்டுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் நேற்று (ஜூன் 19) தம்பி ராமையாவின் பிறந்தநாளை முன்னிட்டு பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ராஜாகிளி படமானது 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ