spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசமுத்திரகனி நடிக்கும் 'ராமம் ராகவம்'.... முன்னோட்டம் வெளியீடு!

சமுத்திரகனி நடிக்கும் ‘ராமம் ராகவம்’…. முன்னோட்டம் வெளியீடு!

-

- Advertisement -

சமுத்திரகனி திரை துறையில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். சமுத்திரகனி நடிக்கும் 'ராமம் ராகவம்'.... முன்னோட்டம் வெளியீடு!அந்த வகையில் இவர் நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். மேலும் சில படங்களில் கதாநாயகனாகவும் சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பாயும் புலி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். கடந்த ஆண்டில் சமுத்திரக்கனி நடிப்பில் வானம், ஆர் யூ ஓகே பேபி போன்ற திரைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டு வெளியாக உள்ள கருடன் படத்திலும் ரத்னம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சமுத்திரக்கனி.

இந்நிலையில் சமுத்திரகனி நடிப்பில் ராமம் ராகவம் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரபல தெலுங்கு நடிகர் தன்ராஜ் கொரனானி இயக்கியுள்ளார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து ஹரிஷ் உத்தமன், தன்ராஜ் கொரனானி, சத்யா, பிரமோதினி ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் சிலுவெரு இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். துர்கா பிரசாத் கொல்லி இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார்.

we-r-hiring

தற்போது இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதன் மூலம் இந்த படம் அப்பா – மகன் உறவை கூறும் படம் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ