விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய்தத் திரிஷா கௌதம் வாசுதேவ் மேனன் மன்சூர் அலிகான் ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இன்னும் சில நட்சத்திரங்கள் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்திற்கு அனிருத் இசை அமைக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. அதனால் இந்த படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் படத்தின் நான் ரெடி பாடல் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில் படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத்தின் பிறந்த நாளான இன்று அவரின் பஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது படத்தில் சஞ்சய் தத் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நான் ரெடி பாடல் ஆனது தாஸ் & கோ ஃபேக்டரியில் நடனம் ஆடுவது போல வடிவமைக்கப்பட்டிருந்தது.
மேலும் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் சஞ்சய் படத்தில் வில்லனாக நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
#AntonyDas is arriving at 4 PM 🔥#Leo
— Seven Screen Studio (@7screenstudio) July 29, 2023
இந்நிலையில் சஞ்சீதத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதை படக்குழுவினர் ட்விட்டர் பக்கத்தில் ஆண்டனி தாஸ் 4 மணிக்கு வருகிறார் என்று பதிவிட்டு அறிவித்துள்ளனர்.