spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎனக்கு காயம்னு யார் சொன்னா, அதெல்லாம் பொய்... உறுதியா சொன்ன சஞ்சய் தத்!

எனக்கு காயம்னு யார் சொன்னா, அதெல்லாம் பொய்… உறுதியா சொன்ன சஞ்சய் தத்!

-

- Advertisement -

படப்பிடிப்பில் எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று நடிகர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

நேற்று முழுவதும் சஞ்சய் தத்-க்கு காயம் ஏற்பட்ட செய்தி தான் இணையத்தில் தீயாக பரவி வந்தது. கேடி என்ற படத்தில் சஞ்சய் தத் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

we-r-hiring

படத்தில் பெரிய வெடிகுண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்ட போது அங்கு இருந்த குண்டு வெடித்து அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த செய்திகள் முற்றிலும் போய் என்று சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

“எனக்கு காயம் ஏற்பட்டதாக செய்திகள் வருகின்றன. அவை முற்றிலும் ஆதாரமற்றவை என்பதை நான் அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். கடவுள் அருளால் நான் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறேன். நான் கேடி படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறேன் & என்னுடைய காட்சிகளை படமாக்கும்போது படக்குழுவினர் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். உங்கள் அக்கறைக்காக அனைவருக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வரும் சஞ்சய் தத், ‘கேஜிஎஃப் 2’ படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது தமிழில் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ மற்றும் விஜயின் ‘லியோ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

MUST READ