நகைச்சுவை நடிகரான சந்தானம் தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் சபாபதி, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. கலவையான விமர்சனங்களையே பெற்று தந்தது.
மேலும் இவர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தில்லுக்கு துட்டு திரைப்படம் வெளியானது. இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து ரசிகர்களுடைய நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் சந்தானம், தனது சமீபத்திய படங்களில் கிடைக்காத வெற்றியை தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகத்தின் மூலம் திரும்பப் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிடி ரிட்டன்ஸ்‘ திரைப்படத்தின் டிரைலர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தை ஆர் கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்திருந்த சுரபி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன், ஷங்கர், விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாக்கியுள்ளது. படத்தில் சந்தானம் சேம்லெஸ் சதீஷ் என்ற கதாபாத்திரத்தில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக நடித்துள்ளார்.இந்த படத்தின் டைட்டில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது.
இப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.