Homeசெய்திகள்சினிமாகாதல் சுகுமார் இயக்கத்தில் புதிய படம் நடிக்கும் சந்தானம்!?

காதல் சுகுமார் இயக்கத்தில் புதிய படம் நடிக்கும் சந்தானம்!?

-

- Advertisement -

காதல் சுகுமார் இயக்கத்தில் சந்தானம் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் சந்தானம் தற்போது கதாநாயகனாக பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் காதல் படத்தில் மூலம் பிரபலமான காமெடியன் சுகுமார் இயக்கத்தில் சந்தானம் புதிய படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து பதிவிட்டுள்ள சுகுமார் “சந்தானத்திடம் ஆறு மாதங்களுக்கு முன் கதை ஒன்லைன் சொன்னதற்கு ‘சூப்பர் மச்சி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி சொல்லு ‘என்று உற்சாகமூட்டினான். சில நாட்களுக்கு முன்பு கேட்டு ரெடி பண்ணிட்டு கால் பண்ணிய போது வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இருக்கிறேன் என்று கூறினான். அப்படியே ஒரு மணி நேரத்தில் கதையை சொல்லி முடித்தேன். கதையை கேட்டதும் நிச்சயமாக பண்றோம் என்றான் சந்தானம். என்று தெரிவித்துள்ளார்.

“எனது இணை தயாரிப்பாளரிடம் சந்தானம் கதை வேற லெவல்ல இருக்கு. இப்ப நான் இவனுக்கு பண்றது என் கடமை. அவன் இன்னும் நல்லா வரணும். நினைச்ச மாதிரி படம் வந்தா நம்ம எல்லாருமே நல்லா இருப்போம்” என சொன்னதும் நான் மகிழ்ச்சியில் கலங்கி போனேன். விரைவில் இறை நல்லாசியுடனும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளோடு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

MUST READ