சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ஒரே கட்டமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேகா ஆகாஷ் இந்தப் படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை பீப்பிள் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது. ஷான் ரோல்டன் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு தீபக் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அத்துடன் குரூப் போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
63 நாட்கள் இடைவெளி ஏதும் இல்லாமல் படப்பிடிப்பை ஒரே கட்டமாக நடத்தி முடித்துள்ளனர்.
கவுண்டர் மன்னன் கவுண்டமணியின் பேமஸ் டயலாக் ஆன வடக்குப்பட்டி ராமசாமி என்பதையே படத்தில் டைட்டிலாக வைத்திருக்கின்றனர். காமெடி ஜானர் தான். எப்படி வருகிறது என்று பாப்போம்~