spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சந்தானம்.... எந்த படத்தில் தெரியுமா?

மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சந்தானம்…. எந்த படத்தில் தெரியுமா?

-

- Advertisement -

நடிகர் சந்தானம் மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சந்தானம்.... எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சந்தானம். அதைத் தொடர்ந்து ஹீரோவாக உருவெடுத்த இவர், தில்லுக்கு துட்டு 1, 2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய வெற்றி படங்களில் நடித்து பெயரையும், புகழையும் பெற்றார். சமீபத்தில் இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் இவர், சிம்புவின் STR 49 படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் நடிகர் சந்தானம், மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது சந்தானம் ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து எந்திரன், லிங்கா ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம். மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் சந்தானம்.... எந்த படத்தில் தெரியுமா?இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் ஏற்கனவே மோகன்லால், சிவராஜ்குமார் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடிக்கும் நிலையில், சந்தானம் இப்படத்தில் இணைய இருக்கும் தகவல் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ