சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
நடிகர் சந்தானம் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், கஸ்தூரி, யாஷிகா, மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் ஆர்யா, என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். மேலும் ஆர்யாவும் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படமானது சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 1,2 மற்றும் டிடி ரிட்டன்ஸ் ஆகிய படங்களைப் போல ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. அதன்படி இப்படம் சந்தானத்தின் மற்ற ஹாரர் – காமெடி படங்களை விட இரண்டு மடங்கு காமெடியும், திகிலும் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால்தான் டைட்டிலில் டெவில்ஸ் டபுள் (DD – Devil’s Double) என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.
மேலும் வருகின்ற மே மாதம் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து கிஸ்ஸா எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது நாளை (ஏப்ரல் 30) இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு நாளை காலை 11 மணியளவில் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.