Homeசெய்திகள்சினிமாசந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ் 2'.... கப்பலில் நடக்கும் படப்பிடிப்பு!

சந்தானம் நடிக்கும் ‘டிடி ரிட்டன்ஸ் 2’…. கப்பலில் நடக்கும் படப்பிடிப்பு!

-

- Advertisement -

நடிகர் சந்தானம் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரைப் பயணத்தை தொடங்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்போது இவர் ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் அடுத்து வருகிறார். சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ் 2'.... கப்பலில் நடக்கும் படப்பிடிப்பு!அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து டிடி ரிட்டன்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார் சந்தானம். இந்த படம் காமெடி கலந்த பாடல் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் ஆகிய ஹாரர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. எனவே தற்போது சந்தானம் நடித்துவரும் டிடி ரிட்டன்ஸ் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தினை நடிகர் ஆர்யா தயாரிக்க பிரேம் ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சந்தானம் தவிர மீனாட்சி சௌத்ரி, நிழல்கள் ரவி, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டன்ஸ் 2'.... கப்பலில் நடக்கும் படப்பிடிப்பு!இந்த படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கப்பலில் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த மாதத்திற்குள் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து விடும் எனவும் இப்படத்தின் டைட்டில் டீசர் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ