நகைச்சுவை நடிகரான சந்தானம் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், சர்வர் சுந்தரம், தில்லுக்குதுட்டு, டிக்கிலோனா, டகால்டி, A 1, பிஸ்கட் பாரிஸ் ஜெயராஜ், குலுகுலு, சபாபதி உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
ஆனால் தற்போது இவர் நடித்துள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
சந்தானம், சுரபி முனிஷ்காந்த், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டிடி ரிட்டன்ஸ். இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார் ஆர்கே என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆஃப்ரோ இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கும்போதே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியான படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றியை பெற்று வருகிறது.
அந்த வகையில் காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவான இப்படம் வெளியான பத்து நாட்களில் 22 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த வெற்றியை சந்தானம் மற்றும் படக் குழுவினர் அனைவரும் சிறப்பாககொண்டாடியுள்ளனர்.
சந்தானத்தின் கேரியரில் அவர் ஹீரோவாக நடித்த படங்களிலயே அதிக அளவில் வசூல் செய்த ஒரே படம் டிடி ரிட்டன்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.