spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவனம் ஈர்க்கும் சந்தானத்தின் 'டிடி ரிட்டன்ஸ்' ட்ரெய்லர்!

கவனம் ஈர்க்கும் சந்தானத்தின் ‘டிடி ரிட்டன்ஸ்’ ட்ரெய்லர்!

-

- Advertisement -

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு இதன் இரண்டாம் பாகமும் வெளிவந்து நேர்மறையான விமர்சனங்களையே பெற்றது.
மேலும் சந்தானம் நடிப்பில் வெளியான சமீபத்திய படங்களில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் தில்லுக்கு துட்டு திரைப்படத்தின் மூன்றாம் பாகமான டிடி ரிட்டன்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து நடிகை சுரபி, முனீஸ் காந்த், மொட்ட ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, மாறன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

we-r-hiring

இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தை ஆர் கே என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதில் ‘பயந்தவனுக்கு தினம் தினம் சாவு துணிஞ்சவனுக்கு ஒரு நாள் தான் சாவு அந்த நாள் இந்த நாளாக இருந்துட்டு போட்டும் வா பாத்துக்கலாம்’ என்ற சந்தானத்தின் வசனங்கள் இடம் பெற்றுள்ளது. கலகலப்பான காமெடி கலந்த ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கவனம் பெற்றுள்ளது. மேலும் இப்படம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ