spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

-

- Advertisement -

அதர்வா நடிக்கும் ‘இதயம் முரளி’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அதர்வா. இவரது நடிப்பில் கடைசியாக ‘தணல்’ திரைப்படம் வெளியானது. அதே சமயம் இவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் ‘இதயம் முரளி’ என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் அதர்வா. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து, இயக்கி வருகிறார். தமன் இதன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?ஒரு பக்க காதல் கதையாக உருவாகும் இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து கயடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன், நிஹாரிகா, இசையமைப்பாளர் தமன், நட்டி நடராஜ், ரக்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ரூ.40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அமெரிக்கா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அதர்வா நடிக்கும் 'இதயம் முரளி' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது ஏற்கனவே இந்த படமானது 2026 காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என சொல்லப்பட்டது. அதன்படி 2026 பிப்ரவரி 13ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ