சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதுஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கிய சந்தானம் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சந்தானம் இங்க நான்தான் கிங்கு என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் பட இயக்குனர் ஆனந்த் இயக்குகிறார். கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்பு செழியன் ஆகிய இருவரும் இந்த படத்தை தயாரிக்கின்றனர். டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த படத்தில் மாயோனே எனும் முதல் பாடல் நாளை மார்ச் 23ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் வெளியாகும் என்று புதிய போஸ்டரின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் இந்த படம் 2024 கோடையில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் முதல் பாடல் வெளியீட்டு விழா ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.