நடிகர் சந்தானம் ஹீரோவாக பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் டிடி ரிட்டன்ஸ், கிக், 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்களை களமிறக்கி இருந்தார்.
இதற்கிடையில் சந்தானம் வடக்குப்பட்டி ராமசாமி எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை சந்தானத்தின் டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து மேகா ஆகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஷான் ரோல்டனின் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. தீபக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்தது. அதன் பிறகு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ் தேதி பட குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி வெளியாக இருப்பதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரில் நடிகர் சந்தானம் சூலம் ஒன்றை கையில் வைத்து நிற்கிறார். அதேசமயம் ரூபாய் நோட்டுகளும் ஆங்காங்கே கீழே விழுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் இன்று காலை 11 மணியளவில் முக்கிய அறிவிப்பு வீடியோ ஒன்றையும் பட குழுவினர் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.