நகைச்சுவை நடிகர் சந்தானம் ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ், கிக், 80ஸ் பில்டப் உள்ளிட்ட படங்கள் வெளியானது. இன்னும் சில படங்களை கைவசம் வைத்திருக்கிறார் சந்தானம்.
அதன்படி சந்தானம், கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். பீப்பிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பாக வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இப்படம் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்து அறிவிப்பை சமீபத்தில் படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.
Exciting news.!! Tomorrow, the laughter ride begins! My next project, Vadakkapatti Ramasamy, unveils its trailer. Join me on this hilarious journey where superstitions meet reality. Don’t miss out on the fun—stay tuned!#VadakkupattiRamasamy@karthikyogitw @akash_megha… pic.twitter.com/gJfjSAWty5
— Santhanam (@iamsanthanam) January 10, 2024

தற்போது வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் சந்தானம் தனது சமூக வலைதள பக்கத்தில் கலகலப்பான புரோமோ ஒன்றை வெளியிட்டு வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலரானது நாளை மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இந்த ப்ரோமோ தற்போது கவனம் பெற்று சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதேசமயம் சந்தானம் மற்றும் கார்த்திக் யோகி ஏற்கனவே கடந்த 2021 இல் வெளியான டிக்கிலோனா படத்தில் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.