Homeசெய்திகள்சினிமாசினிமா விமர்சகராக சந்தானம்..... 'டிடி நெக்ஸ்ட் லெவல்' புதிய ப்ரோமோ வெளியீடு!

சினிமா விமர்சகராக சந்தானம்….. ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ புதிய ப்ரோமோ வெளியீடு!

-

- Advertisement -

டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.சினிமா விமர்சகராக சந்தானம்..... 'டிடி நெக்ஸ்ட் லெவல்' புதிய ப்ரோமோ வெளியீடு!

சந்தானம் நடிப்பில் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை டிடி ரிட்டன்ஸ் படத்தை இயக்கிய பிரேம் ஆனந்த் இயக்க நடிகர் ஆர்யா இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் சந்தானம் சினிமா விமர்சகராக நடித்துள்ளார். சந்தானத்துடன் இணைந்து செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், மொட்ட ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, மாறன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஹாரர் – காமெடி கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து டப்பிங் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. எனவே 2025 மே மாதம் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் KISSA47 எனும் முதல் பாடல் நாளை (பிப்ரவரி 26) காலை 11 மணியளவில் வெளியாக இருக்கிறது.

இந்த பாடல் வரிகளை கெளுத்தி என்பவர் எழுத இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்பாடலை பாடியிருக்கிறார். இது தொடர்பான ப்ரோமோ நேற்று (பிப்ரவரி 24) வெளியாகி இணையத்தை கலக்கியது. தற்போது புதிய ப்ரோமோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ