spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமக்களே ஃப்ரீயா புக் வேணுமா... சரத்குமார் வீட்டுக்கு விசிட் அடிங்க போதும்!

மக்களே ஃப்ரீயா புக் வேணுமா… சரத்குமார் வீட்டுக்கு விசிட் அடிங்க போதும்!

-

- Advertisement -

நடிகர் சரத்குமார் தன்னைக் காண வரும் மக்களுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்கி வருகிறார்.

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். தற்போது இரண்டாவது கதாநாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக நடித்துள்ளார்.

we-r-hiring

இதற்கிடையில் முழு நேர அரசியலிலும் அவர் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்ததற்காக மக்கள் மத்தியில் வறுத்தெடுக்கப்பட்ட சரத்குமார் தற்போது அந்த பிம்பத்தை உடைப்பதற்காக புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.

சரத்குமார் தனது வீட்டில் அமைத்துள்ள நூலகத்தில் 6000 புத்தகங்களுக்கு மேல் வைத்துள்ளாராம். எனவே அதை தன்னைக் காண வரும் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க தொடங்கியுள்ளார். மேலும் அதில் தனது கையொப்பத்துடன் வழங்கி வருகிறார்.

அனைத்து மக்களும் புத்தகங்களை படித்து அறிவைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த முன்னெடுப்பை கையில் எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

மக்களே ப்ரீயா புக் வேணுன்னா நம்ம சுப்ரீம் ஸ்டார் வீட்டுக்கு ஒரு விசிட் அடிங்க!

MUST READ