நடிகர் சசிகுமார் பீரியட் படத்தை இயக்கப் போவதாக அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருபவர் சசிகுமார். அந்த வகையில் இவரது நடிப்பில் மை லார்ட், ஃப்ரீடம் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன. இது தவிர இவர் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இந்தப் படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் சசிகுமார், குற்றப்பரம்பரை நாவலைத் தழுவி வெப் தொடர் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இந்த வெப் தொடர் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. இதற்கிடையில் நடிகர் சசிகுமார் சூர்யாவின் நடிப்பில் பீரியாடிக் படத்தை எடுக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் அந்த கதையை விஜயிடம் கூறி இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் இது தொடர்பாக சசிகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
#Baradwaj: what happened to the period film narrated to #Suriya & #Vijay❓#Sasikumar: That story is still there, to choose right hero🤝. But before that I’m going to direct another period film, shooting from Jan 2026💥. I’m also doing a character in it🌟 pic.twitter.com/qJILSs4qNh
— AmuthaBharathi (@CinemaWithAB) April 29, 2025
அதற்கு சசிகுமார், “இன்னும் அந்த கதை இருக்கிறது. அதற்கு சரியான ஹீரோவை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக நான் இன்னொரு பீரியட் படத்தை எடுக்கப் போகிறேன். அதன் படப்பிடிப்பை 2026 இல் தொடங்குவேன். அதில் ஒரு கேரக்டரில் நானும் நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். எனவே சசிகுமார் இயக்கவுள்ள இந்த பீரியட் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.