Homeசெய்திகள்சினிமாநாங்கலாம் சிம்ரன் கூட நடிக்க கூடாதா?..... மேடையில் சசிகுமார்!

நாங்கலாம் சிம்ரன் கூட நடிக்க கூடாதா?….. மேடையில் சசிகுமார்!

-

- Advertisement -

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சசிகுமார் பேசியுள்ளார்.நாங்கலாம் சிம்ரன் கூட நடிக்க கூடாதா?..... மேடையில் சசிகுமார்!

சசிகுமார் நடிப்பில் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருக்கிறார். மேலும் ரமேஷ் திலக், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை பின்னணியாக கொண்டு எமோஷனலாகவும், கலகலப்பாகவும் உருவாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்துள்ளார். இப்படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதேசமயம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

அந்த விழாவில் பேசிய சசிகுமார், “சிம்ரன் இந்த படத்தின் கதைக்காக ஓகே சொன்னார். ஆனால் எப்படி நீங்க சிம்ரன் ஜோடியாக நடிக்கிறீங்க? என்று எல்லோரும் கேட்டாங்க. நாங்க எல்லாம் சிம்ரன் கூட நடிக்க கூடாதா? எல்லாருடைய ஏக்கம் தான்பா அது. அதெல்லாம் எங்களுக்கு கிடைக்க கூடாதா? எப்படின்னா உங்களுக்கு என்ன? அது அப்படி தான் கதை பாருங்க என்றேன்” என்று கலகலப்பாக பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ