சசிகுமார்- நவீன் சந்திரா நடிக்கும் எவிடென்ஸ் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் சசிகுமார். அதைத்தொடர்ந்து நடிப்பதிலும் ஆர்வம் உடைய இவர் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதே சமயம் ‘மை லார்ட்’ போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கும் சசிகுமார், ‘வதந்தி 2’ வெப் தொடரிலும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவர், எவிடென்ஸ் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘காவல்துறை உங்கள் நண்பன்’ எனும் திரைப்படத்தை இயக்கிய ஆர்.டி.எம் எழுதி இயக்கியுள்ளார். ரான் ஈதன் யோகன் இந்த படத்தின் இசையமைப்பாளராகவும் கே.எஸ். விஷ்ணு ஸ்ரீ இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளனர். பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியானது. மேலும் விரைவில் இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ‘ஸ்மைல் ப்ளீஸ்’ எனும் முதல் பாடல் வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.