Homeசெய்திகள்சினிமா'கூலி' படப்பிடிப்பில் சத்யராஜ்.... வைரலாகும் புகைப்படம்!

‘கூலி’ படப்பிடிப்பில் சத்யராஜ்…. வைரலாகும் புகைப்படம்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தினை கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். 'கூலி' படப்பிடிப்பில் சத்யராஜ்.... வைரலாகும் புகைப்படம்!சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினி நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் வில்லனாக நடிகர் நாகார்ஜுனா நடித்து வருகிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் படத்தில் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத், விசாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தது சென்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.'கூலி' படப்பிடிப்பில் சத்யராஜ்.... வைரலாகும் புகைப்படம்! இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சத்யராஜுடன் லோகேஷ் கனகராஜ் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஏற்கனவே நடிகர் சத்யராஜ் பல வருடங்கள் கழித்து நடிகர் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சத்யராஜுக்கு கூலி படத்தில் என்ன மாதிரியான கதாபாத்திரம் என்பது குறித்த எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அடுத்தது கூலி திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ