சத்யராஜ், வசந்த் ரவி நடிப்பில் வெப்பன்… ரிலீஸ் குறித்த அப்டேட் இதோ…
- Advertisement -

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயம் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். அவரது நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அன்னபூரணி. இப்படத்தில் நயன்தாரா, ஜெய்யுடன் சேர்ந்து சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதனிடையே, சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் வெப்பன். இதில் சத்யராஜுடன் இணைந்து வசந்த் ரவி, தான்யா ஹோப் ராஜுவ் மேனன், ராஜிவ் பிள்ளை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் வசந்த் ரவி அடுத்து அசோக் செல்வனுடன் இணைந்து பொன் ஒன்று கண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து, வெப்பன் படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.
ஜிப்ரான் இதற்கு இசை அமைத்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ளது. கடந்தாண்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வெப்பன் திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி மே மாத இறுதிக்குள் படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.