Homeசெய்திகள்சினிமாசாய் தன்ஷிகாவின் சட்டம் என் கையில் திரைப்படம் இன்று ரிலீஸ்

சாய் தன்ஷிகாவின் சட்டம் என் கையில் திரைப்படம் இன்று ரிலீஸ்

-

- Advertisement -
 
2006-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான திருடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் தன்ஷிகா. முதல் படம் அவருக்கு அவ்வளவு பெரிய பெயரை பெற்றுத்தரவில்லை. இதைத் தொடர்ந்து, 2009-ம் ஆண்டு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்தில் நாயகியாக அவர் நடித்திருந்தார். 5 நாயகிகளில் ஒருவராக தன்ஷிகா நடித்திருப்பார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் தன்ஷிகா.
இதைத் தொடர்ந்து, அருண் விஜய்க்கு ஜோடியாக மாஞ்சா வேலு, நில் கவனி செல்லாதே, அரவான், பரதேசி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இதில் பாலா இயக்கிய பரதேசி படத்தில் சிறந்த நடிப்பை வௌிப்படுத்தி இருப்பார். இதைத் தொடர்ந்து, பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்து அசத்தியிருப்பார். இப்படத்தின் மூலம் தன்ஷிகாவுக்கு கிடைத்த வரவேற்பு, அவரை மலையாள திரையுலகிற்கும் கொண்டு சென்றது. துல்கர் சல்மானுடன் இணைந்து சோலோ என்ற படத்தில் தன்ஷிகா நடித்திருந்தார்.
இறுதியாக சாய் தன்ஷிகா நடிப்பில் தி ப்ரூஃப் என்ற திரைப்படம் வெளியானது. தற்போது அவரது நடிப்பில் திரையரங்குளில் வௌியாகி இருக்கும் திரைப்படம், சட்டம் என் கையில். அபிராமு இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விமலா ராமன், கணேஷ் வெங்கட்ராம், சத்திய பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

MUST READ