spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநடிகை மீனாவிற்கு இரண்டாவது திருமணமா?- எப்போது

நடிகை மீனாவிற்கு இரண்டாவது திருமணமா?- எப்போது

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.
90- களில் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியாக இருந்தவர் நடிகை மீனா.


தமிழ் சினமா மட்டுமின்றி இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம்,என பல மொழிகளிலும் நடித்துள்ள மீனா ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், பிரபு, அர்ஜுன், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

we-r-hiring


தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் மீனா சமீபத்தில் ரஜினிகாந்துடன் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்திருந்தார். எப்போதும் அவருக்கு என்றே தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது.


கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான வித்தியாசாகர் என்பவருடன் மீனாவுக்கு திருமணம் நடைப்பெற்றது. இவர்களுக்கு 11 வயதில் நைனிகா என்ற மகள் உள்ளார்.


நைனிகா அட்லீ இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான ‘தெறி’ திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருப்பார் நைனிகா.


இந்த ஆண்டு தொடக்கம் முதலே நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
வைரஸ் தொற்றால் நுரையீரல் முழுவதும் சேதமடைந்த நிலையில் அவருக்கு மாற்று நுரையீரல் தேவைப்பட்டது. தன்னுடைய கணவருக்கு மாற்று நுரையீரல் கிடைக்க தீவிரமாக முயற்சித்து வந்தார் மீனா.
வித்யாசாகருக்கு மாற்று நுரையீரல் கிடைக்காத நிலையில் சிகிச்சைப் பலனின்றி கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலமானார். இந்த செய்தி திரையுலகில் உள்ள பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


திருமணம் ஆகி 13 ஆண்டுகளே ஆன நிலையில் தனது கணவரை இழந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான நடிகை மீனா தொடர்ந்து வீட்டிலேயே தனிமையில் இருந்து வந்தார்.
கணவரின் இழப்பால் சோகத்தில் மூழ்கிருந்த மீனா பல நாட்களாக எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவந்த நிலையில் சமீபத்தில் தான் சினிமா படப்பிடிப்புகளில் தொடர்ந்து கலந்துகொள்கிறார்.


இந்நிலையில் தான் 46 வயதாகும் நடிகை மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தார் முடிவெடுத்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மீனாவின் மகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு மீனாவை இரண்டாவது திருமணம் செய்ய சொல்லி அவரது பெற்றோர் தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால் மீனா தனக்கு இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறி தொடர்ந்து மறுத்துள்ளார். தற்போது இரண்டாவது திருமனத்திற்கு சம்மதம் கூறியுள்ளார் நடிகை மீனா.


மீனா இரண்டாவது திருமணத்திற்கு ஒகே சொல்லிவிட்டதால் தங்களது நீண்ட நாள் குடும்ப நண்பர் ஒருவரை அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீனாவின் இரண்டாவது திருமணம் பற்றிய செய்தி தான் தற்போது அனைவர் மத்தியிலும் வைரலாகி வருகிறது.
இந்த செய்தி உண்மையா அல்லது வெறும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து தான் நாம் பார்க்கவேண்டும்.

MUST READ