தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வரும் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியிருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில்தான் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் கமல், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் கமல்ஹாசனுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் கமல் இது தொடர்பாக மன்னிப்பு கேட்கவில்லை என்பதால் தக் லைஃப் படத்தை வெளியிட மாட்டோம் எனவும் போர்க்கொடி காட்டியுள்ளனர். இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் குரல் கொடுத்துள்ளார். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கம் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இன்னும் பல பிரபலங்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் கமல்ஹாசன் விவாகாரதம் குறித்த செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.
அதன்படி அவர், “தென்னிந்திய மொழிகள் அனைத்தும் தமிழிலிருந்து வந்தது தான் என்பது உலகத்திற்கே தெரியும். கமல்ஹாசன் வரலாற்று பூர்வமாக தான் கூறினார். எந்த ஒரு வரலாற்று ஆய்வாளர்களும் இந்த விஷயத்தை மறுக்க முடியாது. தமிழர்கள் நாங்கள் எவ்வளவு ஜனநாயகவாதிகள், பேரன்பு மிக்கவர்கள். உங்களுடைய கேஜிஎஃப் 1,2 படங்களை எந்தவித இடையூறும் இல்லாமல் ஓடவிட்டோமே, அதற்கு கிடைத்த பரிசுதானா இது?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
உங்களுடைய அந்தப் படத்தை ஓட வச்சதுக்கு கிடைச்ச பரிசா இது?….. கமல் விவகாரத்தில் கொந்தளித்த சீமான்!
-
- Advertisement -