நடிகர் மோகன்லால் தற்போது வ்ருஷபா, ராம், ஹிருதயபூர்வம் போன்ற படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். மேலும் இவர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவரது நடிப்பில் எம்புரான், துடரும் ஆகிய படங்கள் வெளியாகின. அதில் எம்புரான் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான நிலையிலும் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதைத்தொடர்ந்து வெளியான துடரும் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் தமிழில் தொடரும் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதில் மோகன்லால் உடன் இணைந்து சோபனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தருண் மூர்த்தி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Brilliant Brilliant movie * Thudarum * is ! Only @Mohanlal sir can pull of this film! What an actor! Mesmerised by the best actor in india!
— selvaraghavan (@selvaraghavan) June 3, 2025
இந்நிலையில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன், துடரும் படம் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “துடரும் திரைப்படம் மிகவும் அருமையான படம். மோகன்லால் சாரால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும். என்ன ஒரு நடிகர்! அவர் இந்தியாவின் சிறந்த நடிகர். அவரைப் பார்த்து மெய் மறந்து விட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.