Homeசெய்திகள்சினிமாசீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப் ப்ரியாவின் கணவர் திடீர் மரணம்!

சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப் ப்ரியாவின் கணவர் திடீர் மரணம்!

-

- Advertisement -

பிரபல சீரியல் நடிகை ஸ்ருதியின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகருக்கு வயது30.

தமிழ் சீரியல் உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதி சண்முகப் ப்ரியா. இவர் நாதஸ்வரம் வாணி ராணி, கல்யாணப் பரிசு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

we-r-hiring

இவர் அரவிந்த் சேகர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடி பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து, கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டது. ஸ்ருதி சண்முக பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் ஒரு பாடிபில்டர் மற்றும் எடை குறைக்கும் பயிற்சியாளராக இருந்தார்.

இந்நிலையில் அரவிந்த் சேகர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது தமிழ் சீரியல் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவரின் மறைவை அடுத்து ஸ்ருதிக்கு பலரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ