Homeசெய்திகள்சினிமாஜனாதிபதி மாளிகையில் டன்கி திரைப்படம்.... ஷாருக்கானுக்கு கிடைத்த அங்கீகாரம்...

ஜனாதிபதி மாளிகையில் டன்கி திரைப்படம்…. ஷாருக்கானுக்கு கிடைத்த அங்கீகாரம்…

-

கடந்த சில ஆண்டுகளாக தோல்வியை மட்டுமே களம் கண்ட பாலிவுட் ராஜாங்கத்தில் மீண்டும் வெற்றிப் படங்கள் வரத் தொடங்கியுள்ளன. நடப்பு ஆண்டில் வெளியான பலத் திரைப்படங்கள் வசூல் ரீதியாக மட்டுமன்றி விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன. அதில் பெரும் பங்கு பாலிவுட்டின் பாட்ஷாவாக கொண்டாடப்படும் ஷாருக்கானுக்கே சேரும். ஆண்டின் தொடக்கத்தில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியானது. சித்தார்த் ஆனந்த் இப்படத்தை இயக்கியிருந்தார். படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பட்டையை கிளப்பியது.

இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் வெளியானது. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் என பெரும் நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்தது. இதைத்தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள திரைப்படம் டன்கி. ‘முன்னா பாய் எம்பிபிஎஸ்’, ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’, ‘சஞ்சு’ ஆகிய படங்களை இயக்கியவர் ஹிராணி. படத்தில் டாப்ஸி, விக்கி கவுஷல், போன் இரானி, அனில் குரோவர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், டன்கி திரைப்படம் ஜனாதிபதி மாளிகையில் விரைவில் திரையிடப் பட உள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தாங்கள் விரும்பும் இடங்களில் குடியேறும்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பேசுகிறது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக இத்திரைப்படம் குறைவாகவே உள்ளது.

MUST READ