spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'தளபதி 68' இல் இணையும் பாலிவுட் பிரபலம்!

‘தளபதி 68’ இல் இணையும் பாலிவுட் பிரபலம்!

-

- Advertisement -

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதை தொடர்ந்து வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாக இருக்கிறது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் இந்த படத்தை தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க உள்ளார். இது குறித்து அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. அதன்படி வெங்கட் பிரபு தளபதி 68 படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில் இந்த படம் சம்பந்தமான பல அப்டேட்டுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதன்படி இதில் விஜயுடன் இணைந்து சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெய், அபர்ணாதாஸ், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் தளபதி 68 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதன்படி ஷாருக்கான் அல்லது அமீர்கான் தளபதி 68 இல் இணைய இருப்பதாகவும் இது குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ