நடிகை ஷாலினி, நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே எனும் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்த ஷாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று ட்ரெண்ட் செட்டர் படமாக மாறியது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. மேலும் ரசிகர்களின் ஃபேவரைட் படங்களில் அலைபாயுதே படமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு மாதவன் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் உண்மையான காதல் ஜோடிகளை போல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தனர்.
அடுத்தது இந்த படத்தில் இடம் பெற்ற பல வசனங்கள் இன்று வரையிலும் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு நடிகர் மாதவன் மற்றும் நடிகை ஷாலினி ஆகிய இருவரும் நேரில் சந்தித்திருக்கும் நிலையில் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் செய்து வருவதுடன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.