நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் தான் சண்முக பாண்டியன் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சகாப்தம் என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார். அதைத்தொடர்ந்து மதுரவீரன் எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனி உடன் இணைந்து நடித்திருந்தார். அடுத்ததாக இவரது நடிப்பில் படை தலைவன் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை அன்பு எழுதி இயக்கி இருக்கிறார். இதில் சண்முக பாண்டியன் உடன் இணைந்து யாமினி சந்தர், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை விஜே கம்பைன்ஸ் நிறுவனமும் சுமித் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து இருக்கிறது. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படமானது முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதை ஆகும். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது.
அதே சமயம் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களையும் படக் குழு வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து உன் முகத்தை பார்க்கலையே எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை இசைஞானி இளையராஜா எழுதியிருக்கும் நிலையில் அனன்யா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.