சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான சகாப்தம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் மதுரவீரன் எனும் திரைப்படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து நடித்திருந்தார். அதன் பின்னர் சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் அன்பு இயக்கத்தில் உருவாகி வரும் படை தலைவன் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் சண்முக பாண்டியன் உடன் இணைந்து யாமினி சந்தர், எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தை விஜே கம்பைன்ஸ் நிறுவனமும் சுமித் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இந்த படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படை தலைவன் படத்தின் டிரைலர் நாளை (டிசம்பர் 13) வெளியாகும் எனவும் இந்த ட்ரெய்லரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -