பாலிவுட் கிங் ஷாருக் கான், பதான் படத்திற்கு முன்பு தொடர் தோல்விகளைச் சந்தித்து வந்தார். அவரது ‘ஜீரோ’ திரைப்படம் 50 கோடி வசூலிக்கவே திணறியது. ஷாருக்கானின் ஆட்டம் அவ்வளவு தான் அவர் வீட்டில் இனிமேல் ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான் என்று பேசிய வாய்களை அடைக்கும் படியாக பதான் படத்தில் 1000 கோடி வசூல் கொடுத்து நான்தான் எப்போமே பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்தார்.
பதான் படத்தின் மீது இருந்த பெரும் எதிர்பார்ப்பு படம் வெளியாகும் முன்னரே 10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பதற்கு வழிவகை செய்தது. அப்போதே படம் பெரிய அளவில் வசூலிக்கப் போகிறது என்பது உறுதியானது.
பாகுபலி, கேஜிஎஃப் 2 மற்றும் ஆர்ஆர்ஆர் ஆகிய சில படங்கள் மட்டுமே ரிலீஸுக்கு முன்பே 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகளை விற்பனை செய்தன. இந்நிலையில் ஜவான் திரைப்படம் நாளை வெளியாக இருக்கிறது. எனவே ஜவான் படத்தின் மூலம் ஷாருக்கான் இன்னுமொரு பிளாக்பஸ்டருக்கு களமிறங்குவது போல் தெரிகிறது.ஷாருக்கானின் ‘ஜவான்’ ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் 8 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இன்னும் ஒரு நாள் இருக்கிறது, எனவே 10 லட்சம் டிக்கெட்டுகள் என்ற இலக்கு மிக எளிதாக அடைந்துவிட முடியும். ஒரே ஆண்டில் தனது இரண்டு படங்களின் 10 லட்சம் டிக்கெட்டுகளை விற்று புதிய சாதனை படைக்க உள்ளார் ஷாருக் கான்.
அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிப்பில் ஜவான் திரைப்படம் உருவாகியுள்ளது. ஷாருக் கானின் ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார். நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், யோகி பாபு, பிரியா மணி ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.
- Advertisement -