சிவாஜி கணேசனின் ராமன் எத்தனை ராமனடி திரைப்படம் டிஜிட்டல் முறையில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 
பி. மாதவன் இயக்கத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் 1970ல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ராமன் எத்தனை ராமனடி. சிவாஜி கணேசனுடன் கே.ஆர். விஜயா, ஆர். முத்துராமன் மற்றும் பத்மினி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. 56 வருடங்கள் பிறகு இப்படம் டிஜிட்டல் முறையில் திரையரங்குக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் பலரும் சிவாஜியின் படத்திற்கு மாலை அணிவித்தும், தேங்காய் உடைத்தும், தீபாராதனை காட்டியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் அரவிந்த் ராஜ் இயக்குனர் ராமலிங்கம் மற்றும் பூபதி ராஜா அவர்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போது பேசிய பூபதி அவர்கள், தனது தந்தை பாலமுருகன் எழுதிய வசனங்கள் அனைத்தும் இன்றளவும் பேசப்பட்டுள்ளது. இது வரலாற்று காவியம் இன்றைய இளைஞர்கள் நிச்சயமாக இந்த திரைப்படத்தை திரையரங்கில் வந்து காண வேண்டும் என்பது கோரிக்கையாக வைத்துள்ளார். சிவாஜி ரசிகர்கள் ராமன் எத்தனை ராமனடி இந்த திரைப்படத்தை கண்டு கொண்டாடி வருகின்றார்கள். இது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.


