ஜெயிலர் 2 படம் குறித்து சிவராஜ்குமார் பேசியுள்ளார்.
கடந்த 2023ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், மிர்னா மேனன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வசூலிலும் அடித்து நொறுக்கியது. அதிலும் ரஜினியின் மாஸ், சிவராஜ்குமார், மோகன்லால் வரும் இடங்கள் திரையரங்கை அதிர வைத்தன. இந்நிலையில் இந்த வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாகவும் எஸ்.ஜே. சூர்யாவும் இப்படத்தில் நடிக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சிவராஜ்குமார், ஜெயிலர் 2 படம் குறித்து பேசி உள்ளார்.
#Shivarajkumar about #Jailer2
– Yes I’m part of #Jailer2,Shoot of my portion will start soon. In Jailer I want to be part of it even it’s a small role.
– Mother promisily i don’t know why this much love I’m getting.#Nelsonpic.twitter.com/lwLJm7VjQF— Movie Tamil (@MovieTamil4) April 16, 2025

அதன்படி அவர், “ஜெயிலர் 2 படத்தில் நான் நடிக்கிறேன். என்னுடைய போர்ஷன் விரைவில் தொடங்கும். ஜெயிலர் படத்தில் வெறும் இரண்டு சீன்களில் தான் நான் வந்தேன். அம்மா சத்தியமா, ரசிகர்கள் ஏன் எனக்கு இவ்வளவு அன்பு கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் நண்பர்கள் கூட மாஸாக இருக்கிறது என்று சொன்னார்கள். என் மனைவி கூட ஜெயிலர் படத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வாயில் சிகரெட்டை வைத்து விட்டு நடக்கத்தான் செய்தீர்கள்? என்று கேட்டார். அவ்வளவு பெரிய விஷயம் நான் எதுவும் பண்ணவில்லை. நான் கேமரா மேனுக்கும், நெல்சனுக்கும், அனிருத்துக்கும் நன்றி சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


