- Advertisement -
பிரபல நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதிஹாசன், தான் அரியவகை நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்திருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது இவர் தமிழ், தெலுங்கு மொழி மட்டுமன்றி பாலிவுட் படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அண்மையில் ஸ்ருதி இசை அமைத்து பாடிய இனிமேல் என்ற இசை ஆல்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் டெகாய்ட், மற்றும் சலார் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சென்னை ஸ்டோரி என்ற திரைப்படத்திலிம் நடித்திருக்கிறார்.


தற்போது மும்பையில் இவர் தங்கியுள்ளார். அங்கு ஒரு பாலிவுட் படத்தில் கமிட்டாகி இருக்கும் ஸ்ருதிஹாசன், மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதனிடையே, மும்பையைச் சேர்ந்த ஓவியரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் அண்மையில் தனது காதலை முறித்துக் கொண்டார். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ருதி, தான் அரியவகை நோயால் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்



