spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசித்தார்த், சரத்குமார் நடிக்கும் '3BHK'.... முதல் பாடல் ரிலீஸ் எப்போது?

சித்தார்த், சரத்குமார் நடிக்கும் ‘3BHK’…. முதல் பாடல் ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

சித்தார்த், சரத்குமார் நடிக்கும் 3BHK படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சித்தார்த், சரத்குமார் நடிக்கும் '3BHK'.... முதல் பாடல் ரிலீஸ் எப்போது?நடிகர் சித்தார்த் தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூலை 4-ம் தேதி சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் 3BHK திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் இணைந்து சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத், சைத்ரா ஆச்சர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். குடும்பப் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். அம்ரித் ராம்நாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தார்த், சரத்குமார் நடிக்கும் '3BHK'.... முதல் பாடல் ரிலீஸ் எப்போது?ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும், டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து கனவெல்லாம் நிஜமாக ஒரு நாளும் ஆகும் எனும் முதல் பாடல் இன்று (மே 21) மாலை 6 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ