Homeசெய்திகள்சினிமாரிலீஸ் தேதியை லாக் செய்த 'சிக்கந்தர்' படக்குழு!

ரிலீஸ் தேதியை லாக் செய்த ‘சிக்கந்தர்’ படக்குழு!

-

- Advertisement -

சிக்கந்தர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.ரிலீஸ் தேதியை லாக் செய்த 'சிக்கந்தர்' படக்குழு!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவரது நடிப்பில் தற்போது சிக்கந்தர் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை பிரபல தமிழ் பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே ரமணா, கத்தி, கஜினி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கியுள்ள நிலையில் சிக்கந்தர் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்திலிருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. மேலும் இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே இப்படம் 2025 ரம்ஜான் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ரிலீஸ் தேதியை லாக் செய்த 'சிக்கந்தர்' படக்குழு!அதன்படி வருகின்ற மார்ச் 30ம் தேதி ரம்ஜான் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால், சத்யராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அடுத்தது இந்த படத்தை சாஜித் நதியத்வாலா தயாரித்துள்ள நிலையில் பிரட்டாம் இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ