மணிரத்னம், கமல் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க இயலாது என்று சிம்பு கூறாவிட்டாராம்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் கமல் புதிய படத்தில் நடிக்க உள்ளார். அந்தப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியாகியது.‘நாயகன்’ படத்தை அடுத்து 35 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைகின்றனர். இந்தப் படத்தில் சிம்புவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. கமல் தயாரிக்கும் புதிய படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். எனவே கமல் இருக்கும் இடங்களில் அதிகமாக சிம்புவை பார்க்க முடிகிறது. விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட சிம்பு கலந்து கொண்டார். மேலும் பொன்னியின் செல்வன் 2 ஆடியோ வெளியீட்டு விழாவில் கமலுடன் சிம்புவும் அங்கு காணப்பட்டார். ஆனால் தற்போது சிம்பு மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்க இயலாது என்று கூறிவிட்டாராம். தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் சிம்பு பல கெட்டப்களில் நடிக்க இருக்கிறாராம். அதே நேரத்தில் தான் மணிரத்னம் படமும் உருவாகிறது என்பதால் இரு படங்களில் மாறி மாறி நடிப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால் சிம்பு நடிக்க இயலாது என்று கூறிவிட்டாராம். இதற்கு தயாரிப்பு நிறுவனமும் எந்த ஆட்செபனையும் தெரிவிக்கவில்லையாம்.
இதனால் தயாரிப்பு நிறுவனம் சிம்புவுக்கு பதிலாக வேறொரு நடிகரைத் தீவிரமாக தேட ஆரம்பித்துள்ளனராம்.