நடிகர் ரவியின் அண்ணன் மோகன் ராஜா, தமிழ் சினிமாவில் ஜெயம், எம்.குமரன், சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதிலும் ரவி நடிப்பில் இவர் இயக்கியிருந்த தனி ஒருவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. எனவே இந்த வெற்றியை தொடர்ந்து தனி ஒருவன் 2 படத்தை மோகன் ராஜா இயக்கப் போவதாகவும், அதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் கடந்த பல மாதங்களுக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டது.
அதே சமயம் தனி ஒருவன் 2 படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இருந்து வந்தது. ஆனால் தனி ஒருவன் 2 திரைப்படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. சமீபத்தில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, “தனி ஒருவன் 2 ஒரு பயங்கரமான ஸ்கிரிப்ட். சரியான நேரத்தில் அதன் அப்டேட்டை கொடுப்போம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மோகன் ராஜா, நடிகர் சிம்புவை சந்தித்து கதை சொன்னதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது தனி ஒருவன் 2 திரைப்படத்தில் சிம்பு நடிக்கப் போகிறாரா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் உலா வரும் நிலையில், மோகன் ராஜா – சிம்பு கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் தனி ஒருவன் 2 திரைப்படம் இல்லை என்றும் அது வேறொரு புதிய படமாக உருவாக இருக்கிறது என்றும் அப்டேட் கிடைத்துள்ளது. எனவே வருங்காலத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -