Homeசெய்திகள்சினிமாவெங்கட் பிரபுவுக்காக களமிறங்கிய சிம்பு... நண்பன் ஒருவன் வந்த பிறகு பட லேட்டஸ்ட் அப்டேட்!

வெங்கட் பிரபுவுக்காக களமிறங்கிய சிம்பு… நண்பன் ஒருவன் வந்த பிறகு பட லேட்டஸ்ட் அப்டேட்!

-

‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படத்தின் பர்ஸ்ட் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

மீசைய முறுக்கு படத்தில் நடித்திருந்த ஆனந்த் இயக்கியுள்ள புதிய திரைப்படம்  நண்பன் ஒருவன் வந்த பிறகு.  இந்தப் படத்தில் பவானி ஸ்ரீ கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆர்.ஜே விஜய், குக் வித் கோமாளி பாலா, ஆனந்த், குமாரவேல், லீலா, மோனிகா, வினோத், இர்ஃபான் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஏஎச் காசிப் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நண்பர்களைப் பற்றிய கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. இதில் 13 நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார். அதற்காக முழுவீச்சில் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றனர்.

சமீபத்தில் கூட சுப்ரமணியபுரம், பாய்ஸ், பஞ்ச தந்திரம், என்றென்றும் புன்னகை, சென்னை 600028 உள்ளிட்ட படங்களின் போஸ்ட்டரை ரீகிரியேட் செய்து வெளியிட்டனர். அந்தப் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனம் ஈர்த்தன.

இந்நிலையில் வெங்கட் பிரபு வழங்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சிம்பு வெளியிட இருப்பதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் அந்தப் போஸ்டரில் அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா என்ற பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ