Homeசெய்திகள்சினிமாரெடின் கிங்ஸ்லி பத்தி சொல்லும்போது எல்லாரும் சிரிச்சாங்க.... அன்றே கணித்த சிம்பு!

ரெடின் கிங்ஸ்லி பத்தி சொல்லும்போது எல்லாரும் சிரிச்சாங்க…. அன்றே கணித்த சிம்பு!

-

- Advertisement -

நடிகர் சிம்பு, ரெடின் கிங்ஸ்லி குறித்து பேசி உள்ளார்.ரெடின் கிங்ஸ்லி பத்தி சொல்லும்போது எல்லாரும் சிரிச்சாங்க.... அன்றே கணித்த சிம்பு!

நடிகர் ரெடின் கிங்ஸ்லி தமிழ் சினிமாவில் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து இவர் நெல்சன் இயக்கிய டாக்டர், ஜெயிலர் ஆகிய படங்களிலும் நடித்து பெயர் பெற்றார். இது தவிர பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. அந்த வகையில் தற்போது இவர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரெடின் கிங்ஸ்லி பத்தி சொல்லும்போது எல்லாரும் சிரிச்சாங்க.... அன்றே கணித்த சிம்பு!பிரேம் ஆனந்தின் இயக்கத்திலும் ஆர்யாவின் தயாரிப்பிலும் உருவாகி இருக்கும் இப்படம் வருகின்ற மே 16ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று (மே 5) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சிம்பு, ரெடின் கிங்ஸ்லி குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “ரெடின் கிங்ஸ்லியை உங்களுக்கு கோலமாவு கோகிலா படத்திலிருந்து தான் தெரியும். ஆனால் எனக்கு அவரை வேட்டை மன்னன் படத்தில் இருந்தே தெரியும். ரெடின் கிங்ஸ்லி பத்தி சொல்லும்போது எல்லாரும் சிரிச்சாங்க.... அன்றே கணித்த சிம்பு!அந்த படத்தில் இவருடைய வசனங்கள் மற்றும் காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு, இவர் பெரிய காமெடியனாக வருவார் என்று நெல்சனிடம் சொன்னேன். அப்போது நெல்சன் சிரிப்பார். இப்போ என்னடானா நெல்சன் இவரில்லாமல் எந்த படத்தையும் எடுப்பதில்லை. அந்த அளவிற்கு ரெடின் கிங்ஸ்லி வளர்ந்து இருக்காரு. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ