தக் லைஃப் படம் குறித்து சிம்பு பேசியுள்ளார்.
கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக்செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோரின் நடிப்பில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருக்கிறார். ஏ. ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கும் இந்த படம் தொடர்பான ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் இப்படத்தில் இருந்து டீசரும், அடுத்தடுத்த பாடல்களும், போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றது. இந்நிலையில் நடிகர் சிம்பு, இப்படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ஆக்சன் காட்சிகள் இந்த படத்தில் அதிகம் இருக்கிறது. கமல் சார் மிகப்பெரிய ஆக்சன் காட்சியை செய்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் கமல்ஹாசன், “அது எங்கள் டீமில் யாரும் பேசாத முக்கியமான விஷயங்களில் ஒன்று. ஏனென்றால் நாங்கள் அதை சர்ப்ரைஸாக வைத்திருக்க விரும்பினோம். அதை மிகவும் அருமையாக செய்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.