STR 49 படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 50 படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் STR 51 படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்தார். அதன்படி டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் STR 49 படத்தின் பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்தது. படத்தில் சிம்புவுடன் இணைந்து சந்தானம், கயடு லோஹர் ஆகியோர் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதால் ஏற்கனவே அவர் தயாரித்து வரும் இட்லி கடை, பராசக்தி போன்ற படங்களுக்கு சிக்கல் இருந்திருப்பதாக எழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையினால் இந்த நேரத்தில் STR 49 படம் தொடங்கினால் அந்தப் படத்திற்கும் சிக்கல் வந்துவிடும் என சிம்பு, இப்போதைக்கு இந்த படம் வேண்டாம் என்றும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிவிட்டாராம். எனவே அதற்கு பதிலாக சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில் காதல் சம்பந்தமான கதைக்களத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம்.
இது தொடர்பான பேச்சுகள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. எனவே இந்த படம் தான் சிம்புவின் 49 வது படமாக இருக்கும் என்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ள புதிய படமானது சிம்புவின் 52 ஆவது படமாக மாறும் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.