Homeசெய்திகள்சினிமாசிம்புவின் 'பத்து தல' திரைப்படம் மார்ச் 30-ல் வெளியிட திட்டம்

சிம்புவின் ‘பத்து தல’ திரைப்படம் மார்ச் 30-ல் வெளியிட திட்டம்

-

நடிகர் சிலம்பரசன் நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படம் வரும் மார்ச் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. கடந்த 14-ம் தேதி திரைக்கு வரவேண்டிய ‘பத்து தல’ திரைப்படம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மார்ச் 30-ல் திரைக்கு வரும் என்ற புதிய தகவல் வெளியாகி உள்ளது.

மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, சிம்பு நடிப்பில் ‘பத்து தல’ திரைப்படம் உருவாகி வருகிறது. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா, இப்படத்தை இயக்குகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் 2017-ல் வெளியான ‘மஃப்ட்டி’ படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.

தமிழில் உருவாகும் ‘பத்து தல’ படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிக்கும் இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

MUST READ