STR 49 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் தனது 49வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க அனிருத் இசை அமைக்க போவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்க உள்ளார் எனவும் சமூக வலைதளங்களில் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதன்முறையாக இணைந்துள்ள வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இந்த படம் ‘வடசென்னை’ படத்தின் யுனிவர்சாக உருவாகும் என்றும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர சிம்பு இந்த படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். ஆகையினால் வெற்றிமாறன், சிம்புவை வேறொரு பரிமாணத்தில் காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த முன்னோட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டைட்டிலையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதன்படி இப்படத்திற்கு அரசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு அரிவாளுடன் இருப்பது போன்று காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.